header Home | Set as homepage | Add to favorites | | contact us
Search the Site   Advanced Search »
The Gateway to peaceful Eelam - Eelamonline.com
Sections
Archive
Mo Tu We Th Fr Sa Su
1234
567891011
12131415161718
19202122232425
262728293031

Newsletter
Subscribe to newsletter:




பாதுகாப்பு அச்சுறுத்தலால் சிறிலங்கா அரசு கொழும்பு பாடசாலைகளை மூடியது | மணலாற்றில் கிளைமோர் தாக்குதல் 13பேர் கொல்லப்பட்டனர். | தம்புள்ள பகுதியில் குண்டு வெடிப்பு 20 பொதுமக்கள் பலி :50 பேர் காயம் | யாழில் குண்டுவெடிப்பு: 4 பொதுமக்கள் பலி- 15 பேர் படுகாயம் | கொல்லப்பட்டோரினதும் காயமடைந்தோரினதும் பெயர் விபரங்கள் | மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் பலி- 17 பேர் படுகாயம் | கிளிநொச்சியில் கிபிர் விமானங்கள் குண்டுத்தாக்குதல். | கருணாவிற்கு 9 மாத கால சிறைத் தண்டனை | மட்டக்களப்பில் அகதி முகாம்களில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களை தடுக்குமாறு ஐ.நா சபை கோரிக்கை | கடற்புலிகளுக்கு எதிராக நீர்மூழ்கி பாதுகாப்பு நடவடிக்கை

HEADLINES / முக்கிய செய்திகள்

இராணுவத் தளபாடங்களுக்கு முன்னுரிமை கொடுத்த

image By எல்லாளன் February 07,2008
        சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை விபரிக்க என ஆரம்பித்திருக்கும் "தேசத்திற்கு மகுடம்" என்ற கண்காட்சியில் இராணுவத் தளபாடங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவான அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ...
back pause forward Full story

LATEST NEWS / பிந்திய செய்திகள்

By எல்லாளன் on February 04,2008

பாதுகாப்பு அச்சுறுத்தலால் சிறிலங்கா அரசு கொழும்பு பாடசாலைகளை மூடியது

imageசிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கல்வி வலயத்திற்கு உள்ளிட்ட அனைத்து அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளும்  பாதுகாப்புக் காரணங்களுக்காக நாளை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தென்பகுதியில் அதிகரித்திருக்கும் குண்டுத்தாக்குதல்களையடுத்தே இம்முடிவை அரசாங்கம் எடுத்திருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்திருக்கின்றார். கொழும்பில் விடுதலைப் புலிகள் மேலும் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற புலனாய்வுத்தகவல் படைத்தரப்பிற்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலைகள் ... [full story]

By எல்லாளன் on February 04,2008

மணலாற்றில் கிளைமோர் தாக்குதல் 13பேர் கொல்லப்பட்டனர்.

image        மணலாறு மாவட்டம் ஜனகபுர பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்தை இலக்குவைத்து இன்று பிற்பகல் 3.40 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 படையினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17பேர் காயமடைந்துள்ளனர்.அனுராதபுரம் கொப்பயக்கடுவ சந்தியில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை மொனறாகலை மாவட்டம் புத்தள காட்டுப்பகுதியில் படையினரின் உழவு ஊர்தியை இலக்குவைத்து இன்று பிற்பகல் 2.30மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர்த்தாக்குதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூவர் ... [full story]

By எல்லாளன் on February 02,2008

தம்புள்ள பகுதியில் குண்டு வெடிப்பு 20 பொதுமக்கள் பலி :50 பேர் காயம்

image      மாத்தளை மாவட்டம் தம்புள்ள பகுதியில் கண்டியில் இருந்து அநுராதபுரம் பகுதியை நோக்கி செல்லும் பேரூந்து காலை 7.05 மணியளவில் குண்டு வெடிப்பிற்கு இலக்காகியுள்ளது. இதன்போது 20 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளதாக தெரியவருகிறது. அநுராதபுரத்திற்கு சமய நிகழ்விற்காக செல்லவிருந்த பயணிகளே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக அறியமுடிகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.  [full story]

By எல்லாளன் on January 31,2008

யாழில் குண்டுவெடிப்பு: 4 பொதுமக்கள் பலி- 15 பேர் படுகாயம்

image யாழ். திருநெல்வேலியில் இன்று முற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 4 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 15 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். திருநெல்வேலி வீதியில் உள்ள நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்பாக உள்ள ஆடியபாதம் வீதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11:20 மணியளவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அப்பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பால் சம்பவ இடத்திலேயே 4 பொதுமக்களும் உயிரிழந்தனர். ... [full story]

By எல்லாளன் on January 29,2008

கொல்லப்பட்டோரினதும் காயமடைந்தோரினதும் பெயர் விபரங்கள்

image மன்னார் தட்ணாமடுப்பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் சிறிலங்காப் படையினரின் ஆழஊடுருவும் அணியினர் பயணிகளின் பேருந்தை இலக்குவைத்து கிளேமோர்த்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இத் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 17பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.மற்றும் 9 மாணவர்கள் உட்பட 17பேர் படுகாயமடைந்துள்ளனர்.இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான மன்னார் மடுப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினாரின் ஆழ ஊடுருவும் அணியினர் பேரூந்து ... [full story]

By எல்லாளன் on January 29,2008

மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் பலி- 17 பேர் படுகாயம்

imageமன்னார் மாவட்டம் தட்சணாமருதமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி மீது சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி இன்று பிற்பகல் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 9 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். சின்னப்பண்டிவிரிச்சான் அ.த.க. வித்தியாலய பாடசாலை மாணவர்களே இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை முடிந்து ... [full story]

By எல்லாளன் on January 25,2008

கிளிநொச்சியில் கிபிர் விமானங்கள் குண்டுத்தாக்குதல்.

image சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் இன்று காலை வன்னி வான்பரப்பிற்குள் நுழைந்து கிளிநொச்சி மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்களை நடாத்தியுள்ளன. இதில் இருவர் கொல்லப்பட்டனர் யுவதி உட்பட மூவர் காயமடைந்தனர் குடியிருப்புக்கள் பல அழிவடைந்துள்ளன.காலை 7.30 மணியளவில் இந்தக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.கிளிநொச்சி நகரின் மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலால் கிளிநொச்சி நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. காலை பாடசாலை மாணவர்கள் பாடைசாலைக்குச் செல்லும் வேளை ... [full story]

By எல்லாளன் on January 25,2008

கருணாவிற்கு 9 மாத கால சிறைத் தண்டனை

imageபோலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் நுழைந்ததாக குற்றஞ்சாட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு பிரித்தானிய நீதிமன்றம் 9 மாத கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.மேற்கு லண்டனின் ஐல்வேர்க்கில் உள்ள நீதிமன்றத்தில் கருணா அம்மான் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.அடையாள அட்டை சட்டத்தின் கீழ், மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட கருணா மீது, போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி, பிரித்தானியாவிற்குள் ... [full story]

By எல்லாளன் on January 24,2008

மட்டக்களப்பில் அகதி முகாம்களில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களை தடுக்குமாறு ஐ.நா சபை கோரிக்கை

image    மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்களின் அகதி முகாம்களில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களை தடுக்குமாறு பாதுகாப்பு மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இடம்பெயர்ந்தவர்களுக்கான தங்கியுள்ள அகதி முகாம்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான நிவாரணங்கள் கொள்ளையிடப்படுவதைத் தடுப்பதற்கும் அந்த முகாம்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைகளின் இரண்டு நிறுவனங்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுது;துள்ளன.ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அலுவலகம் மற்றும் ... [full story]

By எல்லாளன் on January 23,2008

கடற்புலிகளுக்கு எதிராக நீர்மூழ்கி பாதுகாப்பு நடவடிக்கை

image  கடற்புலிகளின் நடவடிக்கைளை முறியடிக்கும் விதத்தில் கைச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் இலங்கை கடற்படையினரால் விசேட நீர்மூழ்கி பாதுகாப்புத் திட்டமொன்றை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய (த இந்து) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இதற்காக கடல் குண்டு வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்திற்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டாம் என இந்திய கடற்பரையினரை இலங்கை கடற்படையினர் அறிவுறுத்தியுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.தமிழ் நாட்டின் பிரதான கடற்படை அதிகாரி கமாண்டர் ... [full story]

Most Popular

More News